Pages

Oct 20, 2018

ராமதுரை காலமானார்

அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.

இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.

அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.

ராமதுரையின் நீண்ட பயணத்தில் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - அவரை ஊக்குவித்து கற்க உதவியவர்கள்,  வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், அவருடன் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்.

- ராமதுரையின் குடும்பத்தினர்

50 comments:

  1. அய்யாவின் காலமான செய்தி ...மிகவும் கவலையளிக்கின்றது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இனியும் படைப்புகள் ராமதுரை அவர்கள் நினைவுகளை மனதில் தூண்டும் .எளிய தமிழில் இனி வானவியல் தொடர்பாக கட்டுரைகள் யாரை தருவார் என்று ஒவ்வொரு தமிழனும் ஏங்குவதே ராமதுரை அவர்களின் புகழைக் கூறும்.

    ReplyDelete
  3. My sincere condolences to his family and friends. I always loved receiving his e-newsletters in my inbox and I could not digest the fact that he is no more. May his soul rest in peace.

    ReplyDelete
  4. கடினமான அறிவியல் செய்திகளை, எளிமையான தமிழில் அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

    ராமதுரை ஐயா அவர்களின் இழப்பு பேரிழப்பு :-( .

    தான் இருந்த வரை, தான் ரசித்த, விரும்பிய அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளை அனைவருக்கும் எளிய தமிழில் கொண்டு சேர்த்தார்.

    ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

    இறப்பு குறித்து எங்களுக்கு தெரிவித்த குடும்பத்தினருக்கு நன்றி.

    ReplyDelete
  5. அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம். அவர் மறைந்தாலும் அவரது புத்தகங்கள் வழியாக என்றும் நம்முடன் வாழ்வார் * பாரதி திருச்சி

    ReplyDelete
  6. ஐயா அவர்களின் மறைந்த செய்தி மிகவும் வேதனையாக உள்ளது. எளிய நடையில் எளிமையாக அறிவியல் நுணுக்கங்களை உதாரணத்துடனுன் விளக்குவதில் சிறந்தவர். இணைய உலகில் அவ்வப்போது வரும் அறிவியல் புரளிகளை அறிவியல் ரீதியாக சுட்டிk காட்டி தெளிவு படுத்துவார். எங்களுடைய கேள்விகளுக்கும் புரியும் வண்ணம் விளக்குவார். நிச்சயமாக ஐயா மற்றும் அவருடைய கட்டுரைகளை மறக்க முடியாது . #RIP

    ReplyDelete
  7. தங்களுடைய இழப்பு அறிவியல் தமிழில் ஈடுசெய்ய இயலா இழப்பு அய்யா..தமிழ்ச் சமூகம் தங்களை போன்றோருக்கு இருக்கும்போது முக்கியத்துவம் தருவதில்லை...தங்களை போன்ற அறிஞர்களை போற்றாத சமூகம் தன் அழிவை தானே தேடிக்கொள்ளும்...வாழ்க நின் புகழ் அய்யா..தங்கள் தமிழ் பணி போற்றத்தக்கது...இளையவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பது..நீங்கள் முன்னோடியாக இருந்து அவர்களை என்றும் வழிநடத்துவீர்கள்..எங்கள் மனங்களில் வாழ்வீர்கள் அய்யா நன்றி

    ReplyDelete
  8. அருமையான அறிவியல் கட்டுரைகளை எளிய தமிழில் படைத்த ஆசான்.

    அஞ்சலி.

    ReplyDelete
  9. மிக வருத்தம் அளிக்கிறது. அரிதான அறிவியல் தகவல்களை வாசிப்பவருக்கு சுவாரஸ்யமான வகையில் மிக எளிய நடையில் எழுதிய அவர் கட்டுரைகள் காலம் கடந்தும் பேசும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறுதல் அடையட்டும்.

    ReplyDelete
  10. அற்புத அறிவியலை அழகிய தமிழில் உங்களை போல யாரும் இனி சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை ஐயா..,
    ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. என் மனுதுக்குப் பிடித்த அறிவியல் எழுத்தாளர்.... ஐயாவின் மறைவு அறிவியல் தமிழுக்குப் பேரிழப்பு..

    ReplyDelete
  12. ஆழ்ந்த இரங்கல்கள் அறிவியல் அறிஞருக்கு

    ReplyDelete
  13. ஐயா திரு ராமதுரையின் இறப்பு வருத்தமளிக்கின்றது, ஐயாவின் அறிவியல் சார்ந்த பதிவுகளைப் பல வருடங்களாக வாசித்துள்ளேன், அறிவியல் சார்ந்த பல சந்தேகங்களுக்கு எளிதாகத் தமிழில் புரியும்படி விளக்கமளித்துள்ளார், ஐயாவின் இறப்பு நிச்சயம் ஒரு பெரிய இழப்புதான், ஐயா திரு ராமதுரையின் குடும்பத்தினருக்கு எனது இறங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  14. மிகவும் வருத்தமளிக்கிறது

    ReplyDelete
  15. அய்யா அவர்களின் பணி மகத்தானது இனி தமிழில் அறிவியல் என்பது தமிழர்களுக்கு பெருங்கனவு

    ReplyDelete
  16. வருந்துகிறேன். துயரத்தில் உள்ள அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல தமிழில் எளிய நடையில் அறிவியற் கருத்துக்களை வழங்கியவர். தமிழர்தம் நிஞ்சில் என்றென்றும் வாழ்வார்.

    ReplyDelete
  17. தமிழ் வலைப்பூ உலகில் நுட்பம் பற்றி எழுதிய மிகச் சிலரில் ஒருவர். அய்யா அவர்களது மறைவு அவர்தம் குடும்பத்தாருக்கும், வலைப்பூ சமூகத்திற்கும் இழப்பு. தன் கடமையை முடித்துவிட்டு அமரர் உலகம் திரும்பியிருக்கும் அவர் இறைவன் காலடியில் இறைப்பாறுக.

    ReplyDelete
  18. ஆழ்ந்த வருத்தங்கள் ஐயா அவர்களின் ரசிகன் நான் எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதி தமிழ் கூறும் நல்லுலகில் அறியவியல் வளர்த்தவர் அவர் மறைந்தாலும் அவரின் எழுத்துகள் மறையாது.

    சலாவுதீன்,திருவாரூர்.

    ReplyDelete
  19. Biggest loss for science enthusiasts.
    No one can replace you sir.

    ReplyDelete
  20. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  21. Very sorry I love sir your katturi ( you my teacher)

    ReplyDelete
  22. Rest in peace sir. Will miss your writings.

    ReplyDelete
  23. Respected sir,
    Thanks a lot for your contributions.
    Om Shanti, Om Shanti, Om Shanti...

    ReplyDelete
  24. Sorry to hear..Missing your writings sir

    ReplyDelete
  25. மிகச்சிறந்த தமிழ் அறிவியல் ஆசானை இழந்து விட்டோம். ஆழ்ந்த இரங்கல்..

    ReplyDelete
  26. ஒரு விடிவெள்ளியை இழந்து நிற்கிறோம்...அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  27. நட்சதிரமாய் மாறிடல் வேண்டும்..

    ReplyDelete
  28. RIP . Best man to explain in simple tamil words. We miss you sir

    ReplyDelete
  29. My deepest condolence to your family. RIP ..

    -Sasikumar

    ReplyDelete
  30. One more legend gone from this world...

    ReplyDelete
  31. Rest in pease Sir.

    ReplyDelete

  32. அவரின் மறைவு எங்களுக்கு பேரிழப்பு.....

    ReplyDelete
  33. அறிவியலை அனைவருக்கும் விதைத்து விட்டு சென்றுள்ளீர் நன்றி ஐயா !!!

    ReplyDelete
  34. It's a great loss. May his soul rest in peace.

    ReplyDelete
  35. வருத்தத்தை தரும் செய்தியை இப்போது தான் பார்த்தேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  36. மறக்க முடியாத ஆளுமை

    ReplyDelete
  37. மிக வருத்தமான செய்தி

    ReplyDelete
  38. நன்றி ஐயா உங்கள் தகவல்கள் என்றும் நிலைத்து நிற்கும் RIP...

    ReplyDelete