Pages

Jan 26, 2012

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

நுனோ கோம்ஸ்
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.

ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.

ஸ்குபா அணிந்து நீச்சல்
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.

விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.

தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.

உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.

கடல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது

1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.

ட்ரீயஸ்ட் நீர் மூழ்கு கலம். அடிப்புறத்தில் அமைந்த
கோளத்தில் தான் இருவரும் இருந்தனர்
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.

சிவப்பு வட்டம் - பசிபிக் கடலில்
மரியானா அகழி அமைந்த இடம்
கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்.

56 comments:

  1. ஆச்சர்யமான தகவல்..

    ReplyDelete
  2. அக்காலத்தில், கடலில் மூழ்கி முத்து எடுத்தார்களே, எப்படி?
    முத்து கடலின் நீர் மட்டத்திற்கு கீழே மிதந்து கொண்டிருக்குமா?
    விளக்கவும்.

    ReplyDelete
  3. அக்காலத்தில் உடலுடன் எடையை(கற்களை)கட்டிக் கொண்டு கடலுக்குள் இறங்குவர்.சுவாசக் கருவி கிடையாது. தம் கட்டிக் கொண்டு அதாவது மூச்சை அடக்கிக் கொண்டு உள்ளே இறங்குவர். அந்த நாளிலேயே இப்ப்டி தம் கட்டி உள்ளே இறங்குவதில் பயிற்சி உண்டு.
    கரையோரக் கடல்களில் ஆழம் குறைவு. சுமார் 400 அல்லது 500 அடி வரை இறங்கலாம்.இவ்விதம் கடலுக்குள் இறங்குகிறவர்களால் ( நல்ல பயிற்சி இருந்தால்) தாராளமாக ஒன்பது நிமிஷ்ம் வரை மூச்சை அடக்கி இருக்க முடியும். இப்போதும் சரி இவ்விதம் மூச்சை அடக்கிக் கொண்டு கடலில் -- நீரில் -- இறங்குவதில் போட்டிகள் நடததப்படுகின்றன.
    இந்தியாவில் மட்டுமன்றி அந்த நாட்களில் பல வெளி நாடுகளிலும் இவ்விதம் கடலில் இறங்கி முத்து எடுத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  4. அப்ப subsea சொல்லி crude oil எப்படி drill போடுகிறார்கள்!

    ReplyDelete
  5. ராஜரத்தினம்
    கரையோரக் கடலில் தான் crude எண்ணெய் ஊற்றுகள் நிறைய இருக்கின்றன்.முன்பெல்லாம் க்டலில் 400 அடி அல்லது 600 அடி ஆழத்தில் கடலடித் தரையில் துளையிட்டு குழாய்களை இறக்கி எண்ணெய் எடுத்து வந்தனர். இப்போது சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்திலும் கடலடித் தரையில் துளையிடுகின்றனர்.கடலடித் த்ரையில் செயல்படுபவை எல்லாம் தானியங்கி கருவிகளும் யந்திரங்களுமே.Remotely operated vehicles (ROV)எனப்படும் ராட்சத யந்திரங்களைக் கொண்டு பல பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து இயக்கப்படுபவை.

    ReplyDelete
  6. கடலின் உங்கள் தளத்தை தினமும் படிக்கிறேன் அறிவியல் கட்டுரைகள் எளிய தமிழில் அருமையாக எழுதுகீரிர்கள் வாழ்த்துக்கள் ஆழத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தெரியும் அவற்றின் வாழ்கை முறை எப்படி காற்று,வெளிச்சம்,உணவு பற்றி தெரிவிக்கவும் நன்றி

    சலாவுதீன் பஹ்ரைன்

    ReplyDelete
  7. உங்கள் வலைத்தளம் சிறப்பாக உள்ளது. நிறைய தகவல்களை எளிமையான தமிழில் வழங்குகிறீர்கள்

    ReplyDelete
  8. தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

    வாசிக்கவே வியப்பா இருக்கு!!!!

    ReplyDelete
  9. Ungal Thalam sirakka
    Vaalththukkal Anbarea.!

    ReplyDelete
  10. அனைவரும் பார்க்க வேண்டிய தளம் .

    ReplyDelete
  11. I have visited the site only today. It is amazing. Congrats. Santhanakrishnan, Trichy.

    ReplyDelete
  12. today only i have visited. very interesting.thanks to vikatan and Mr. Ramadurai

    ReplyDelete
  13. i came here through aanada vikadan...very useful..thanks a lot mr.Ramadurai

    ReplyDelete
  14. சார் எனக்கு இதில் ஒரு சந்தேகம். கடலில் கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிகரித்து விடுகிறது அல்லவா? அப்போ பொருளின் எடையைவிட அழுத்தம் கூடுதலாக இருந்தால் அந்தப் பொருள் அங்கேயே மிதக்குமா? அல்லது கடலில் விழும் எல்லாப் பொருளும் அதன் தரையை அடைந்தே தீருமா?

    ReplyDelete
  15. பன்னிக்குட்டி டி. ராமசாமி:
    அழுத்தம் வேறு அடர்த்தி வேறு.ஆகவே கடலின் உள்ள் விழுகின்றவை கடலடித் தரைக்குத்தான் செல்லும்.

    ReplyDelete
  16. http://www.youtube.com/watch?v=A10qL6eZI2E

    ReplyDelete
  17. ஐயா,
    நான் ஓர் ஆசிரியன்.
    உங்கள் போஸ்ட் அனைத்தையும் என் குழந்தைகள் விரும்பி படிக்கிறார்கள்.
    உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. James Cameron first man to enter in Mariana now

    ReplyDelete
  19. 'To hell and back': James Cameron is first solo diver to reach deepest point on Earth - but has to race back to surface after hydraulic failure seven miles down
    Director becomes first human to visit bottom of trench since January 1960
    Cuts short dive after hydraulic failure
    Cameron descended 35,756 feet (6.77 miles/10.89km) to reach 'Challenger Deep' in the Mariana Trench

    Your articles are too good and informative. Great work, thanks sir,
    RVR


    RVR

    ReplyDelete
  20. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர என் மன மார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க!!!

    ReplyDelete
  21. its very use full.... thanks to Mr.N.Ramadurai Sir

    ReplyDelete
  22. அருமையான தகவல்கள். தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஐயா வணக்க்ம்.
    கடலில் குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழே போனால் நீரின் அழுத்தம் தாங்காமல் மனிதன் இறந்து விடுவான் என்று குறிப்பிட்டுஉள்ளீர்கள் அப்படியென்றால் கடல்வாழ் உயிரனங்கள் எப்படி அவ்வளவு ஆழத்தில் எவ்வித பாதிப்புமின்றி உயிர்வாழ்கின்றன.

    வெங்கடேஷ்

    ReplyDelete
  24. வெங்கடேஷ்
    கடலில் பல அடுக்குகள் உள்ளன. கடலின் மேல் மட்டத்தில் வாழும் மீன்கள் அந்த மட்டத்தில் தான் வாழும். மிக் ஆழத்துக்குச் செலவதில்லை. கடலில் மிக மிக ஆழத்தில் வாழும் மீன்கள் மேல் மட்டத்துக்கு வருவதில்லை.மிக ஆழத்தில் வாழும் மீன்கள் அந்த அழுத்த்த்துக்குப் பழகிப் போனவை.ஆகவே அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
    தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் மிக உயர்ந்த மலைப் பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு காற்று அடரத்தி மிகவும் குறைவு. வெளியிலிருந்து அந்த உயரத்துக்குச் செல்ப்வரகளால் முதலில் அங்கு சுவாசிப்பது கஷ்டமாகவே இருக்கும். பல நாட்கள் பழகிய பிறகு தான் அவர்களால் இயல்பாக சுவாசிக்க இயலும்.மிக் உயர்ந்த மலைப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களின் மார்பு சற்று பெரிதாகவே இருப்பதாக ஆயுவ்கள் காட்டியுள்ளன.

    ReplyDelete
  25. தங்களின் விளக்கமான பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா.

    வெங்கடேஷ்.

    ReplyDelete
  26. sir ur doing excellent job,

    sir jemes cameron also reached merina trench know?

    http://news.nationalgeographic.com/news/2012/03/120325-james-cameron-mariana-trench-challenger-deepest-returns-science-sub/

    ReplyDelete
  27. Salbu,
    ஜேம்ஸ் கேமிரான் சாதனை பற்றி ஏற்கெனவே 2012 ஏப்ரல் முதல் தேதியன்று ஒரு கட்டுரை இந்த வலைப் பதிவில் வெளியாகியுள்ளது. ”ஆழ்கடலுக்குள் செல்வது எப்படி என்ற தலைப்பிலான அக் கட்டுரையை ஏப்ரல் மாதக் கட்டுரைத் தொகுப்பில் காணலாம்.

    ReplyDelete
  28. nice work...very interesting...

    ReplyDelete
  29. நீங்கள் கூறியிருக்கும் தகவல் அனைத்தும் அற்புதமாக உள்ளன....வாழ்த்துக்கள் இதில் அநேக தகவல் உலகப் பொது மறை அல் குர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது.எனவே நீங்கள் குர்ஆனையும் ஆய்வு செய்தால் இன்னும் பல தகவல் கிடைக்கும்....நன்றி

    ReplyDelete
  30. ungal padaipugal meegavum aruputham !!!

    ReplyDelete
  31. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  32. Are Aliens living under the water?

    ReplyDelete
  33. Nazeer
    ¸கடலுக்கு அடியில் வேற்றுலக மனிதர்கள் கிடையாது.அப்படி வேற்றுலக ம்னிதர்கள் இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள பயங்கர அழுத்தம் காரணமாக நசுங்கி மடிந்து போவார்கள்.. உலகின் க்டல்கள் அனேகமா முற்றிலுமாக ஆராயப்பட்டுள்ளது. கடல் வாழ் உயிரினங்களைத் தவிர, வேறு எதுவும் இருப்பதாகத் தெரிய வரவில்லை.

    ReplyDelete
  34. ubayogamana thagavalgaluku nandri ayya

    ReplyDelete
  35. very good infirmation,thank you sir.

    ReplyDelete
  36. அருமையான தகவல்கள். உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  37. பால்வீதி அண்டத்தில் Alien உள்ளனவா?

    ReplyDelete
  38. ARUMUGAM CSE
    இது வரை பூமி தவிர வேறு எங்கும் மனித இனம் உள்ளதாகக் கண்டறியப்படவில்லை.Alien பற்றி பற்றி ஏராளமான கதைகளும் நாவல்களும் உள்ளன. பல சினிமாப் படங்களும் உள்ளன. இவை எல்லாமே வெறும் கற்பனைதான்.

    ReplyDelete
  39. MIKAVUM ARUMAI AYYA:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::MIKKA NANRI

    ReplyDelete
  40. தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை மெய்ப்பொருள் காண விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள தளமாக இருக்கும்.
    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா. நன்றி
    www.kganand.blogspot.in

    ReplyDelete
  41. Thanks for your all your post. Nandri ayya.

    ReplyDelete
  42. அருமையான கருத்துக்கள் அய்யா

    ReplyDelete
  43. Thank you sir,Pls continue and best wishes.

    Wish you Happy new year.

    ReplyDelete
  44. where the pearls are in sea sir??????

    ReplyDelete
  45. kadalin azam 4 km thana ? sir

    ReplyDelete
  46. durai ece
    பூமியில் கடலில் மிக ஆழமான இடம் சேலஞ்சர் மடு. அங்கு கடலின் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். தாங்கள் உலகின் கடல்களின் சராசரி ஆழத்துடன் ( 4 கிலோ மீட்டர்) குழப்பிக்கொண்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  47. அன்புள்ள அய்யா,வணக்கம்.
    கடல்கள் பார்க்க ஏன் நேர் கோடாக தெரிகிறது?
    நடு கடல் என்று ஒன்று உண்டா?
    உண்டு என்றால் அதன் ஆழம் என்ன?

    ReplyDelete
  48. R.Thirtha malai
    கடற்கரையில் நின்று பார்த்தால் பூமியின் வளைவு தெரிவதில்லை என்பதை மனதில் கொண்டு கேள்வி கேட்டுள்ளது போலத் தோன்றுகிறது. பூமியானது வடிவில் பெரியது. எனவே தான் கடல் நேர் கோடு போலத் தெரிகிறது,
    பூமியில் உள்ள பசிபிக் கடல் இநதுமாக்க் கடல், அட்லாண்டிக் கடல் என எல்லாக் கடல்களிலும் ஆழமான இடம் உண்டு. ஒவ்வொரு கடலிலும் ஆழமான இடம் இருக்கிறது. ஆனால் மிக ஆழமான பகுதி நடுக்கடலில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எல்லாக் கடல்களையும் எடுத்துக் கொண்டால் உலகில் மிக ஆழமான இடம் சேலஞ்சர் மடு ஆகும். அங்கு ஆழம் 11 கிலோ மீட்டர். அது பசிபிக் கடலில் உள்ளது.

    ReplyDelete
  49. மிகவும் அருமையான பதிவு .

    ReplyDelete
  50. These explanations given above about various important details are
    very simple and again one can easily understand -what is what-
    without any extraordinary efforts or someone's guidance. More over very interesting and make one to read top to bottom non-stop!

    Asutosh









    ReplyDelete
  51. சார் உங்கள் கூற்றுப்படி கடலில் நீந்துபவர்கள் ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டுடே ஆழத்தில்10 மீட்டர் ஆழம்தான் செல்லமுடிகிறது.ஆனால் முத்து எடுப்பவர்கள் 500ft (150m) வரை செல்லமுடிகிறதே இது சாதியமா..??

    ReplyDelete
  52. இந்தியா சார்பில் கடலுக்கு அடியில் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி நடத்தும் தேசிய திட்டத்தின் பெயர் என்ன ?

    ReplyDelete