தமிழ் தி ஹிந்து இதழில் என் கட்டுரை 20 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது.
செவ்வாயை வெல்லுமா மங்கள்யான்?
Showing posts with label விண்வெளி பயணம். Show all posts
Showing posts with label விண்வெளி பயணம். Show all posts
Sep 20, 2014
Aug 27, 2014
எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்யும் விண்கலம்
நாஸா அனுப்பிய ஒரு விண்கலம் எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த விண்கலம் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் ஆமை வேகத்தில் செல்லவில்லை. மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் ஒன்பது கிரகங்கள் உள்ளன. நாஸா முன்னர் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கிச் சென்று படங்களைப் பிடித்து அனுப்பின. அந்த கிரகங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் பாக்கியாக இருந்தது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புளூட்டோ தான் மிகச் சிறியது.
அண்மைக் காலம் வரை புளூட்டோ ஒரு கிரகமாகக் கருதப்பட்டது. இப்போது அது குட்டிக் கிரகம் என ”பதவி இறக்கம்” செய்யப்பட்டுள்ளது.
அது இன்னும் சுமார் ஓர் ஆண்டு பயணம் செய்தாக வேண்டும். அது போய்ச் சேர வேண்டிய இடம் புளூட்டோ. புளூட்டோ சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது.
![]() |
| நியூஹொரைசன்ஸ் விண்கலம் நெப்டியூனின் சுற்றுப்பாதையை கடந்துள்ளதை இப்படம் காட்டுகிறது. |
ஆளில்லா விண்கலமான நியூஹொரைசன்ஸ் இப்போது நெப்டியூன் என்னும் கிரகத்தின் சுற்றுப்பாதையைக் கடந்து சென்றுள்ளது. அந்த அளவில் அது 440 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்றுள்ளது. இன்னும் சுமார் 37 கோடி கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு நியூஹொரைசன்ஸ் அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி புளூட்டோவை சென்றடையும்.
![]() |
| சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புளூட்டோதான் மிகச் சிறியது. |
அண்மைக் காலம் வரை புளூட்டோ ஒரு கிரகமாகக் கருதப்பட்டது. இப்போது அது குட்டிக் கிரகம் என ”பதவி இறக்கம்” செய்யப்பட்டுள்ளது.
சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் புளூட்டோ பற்றி விரிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே புளூட்டோ பற்றி நியூஹொரைசன்ஸ் தெரிவிக்கக்கூடிய தகவல்களை அறிய விஞ்ஞானிகள் மிக ஆவலாக இருக்கின்றனர்.
நியூஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள பெரும்பாலான கருவிகள் இப்போது “ உறக்க நிலையில்” வைக்கப்பட்டுள்ளன. அதாவது அவை செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புளூட்டோவை நெருங்கும் சமயத்தில் அவை செயல்படுத்தப்படும்.
விண்கலத்தில் உள்ள கருவிகள் செயல்படுவதற்கு மின்சாரம் தேவை. இதைக் கருத்தில் கொண்டு அணுசக்தி பாட்டரி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டரியில் புளூட்டோனியம்-238 என்னும் அணுசக்திப் பொருள் 10 கிலோ அளவுக்கு உள்ளது. ( புளூட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு புளூட்டோவின் பெயர் அதற்கு வைக்கப்பட்டது)

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்த பின்னர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். புளூட்டோவுக்கும் மிக அப்பால் வால் நட்சத்திரங்கள் அடங்கிய குய்பெர் வட்டாரத்துக்கும் அந்த விண்கலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் வியாழன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பயனீர்-1 பயனீர்-2, வாயேஜர் -1, வாயேஜர் -2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் கோடானு கோடி கிலோமீட்ட்ர் தொலைவைத் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)