என்னைப் பற்றி

Share Subscribe
என்.ராமதுரை அறிவியல் எழுத்தாளர். 1967-ல்  Isaac Asmiov எழுதிய "Inside the Atom" புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததில் ஆரம்பித்து, பத்துக்கு மேற்பட்ட பொது அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார்.

ராமதுரை ”தினமணி” நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், அதன் அறிவியல் வார இணைப்பான "தினமணி சுடர்" இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றினார். தினமணியிலும், மற்ற பத்திரிகைகளிலும், பல பொது அறிவியல் மற்றும் பிற கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

1989-ம் ஆண்டு அமெரிக்க மற்றும் UK அரசுகளின் அழைப்பில் அந்நாடுகளின் முக்கிய அறிவியல் நிறுவனங்களுக்குச் சென்று வந்தார்.  இந்த அனுபவத்தை  "செல்வச் சீமையிலே" என்ற தலைப்பில் தொடர் பயணக் கட்டுரையாக எழுதினார். இத்தொடர் "தினமணி கதிர்" வார இணைப்பில் வெளிவந்தது.

2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ராமதுரைக்கு தேசிய விருதை வழங்குகிறார்
முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப்ருத்விராஜ் சவான்
26 Feb, 2010

எளிதில் புரியும்படியாக அறிவியல் கருத்துக்களை தமிழில் சொல்லுவதைத் தனது முக்கிய பணியாக நினைத்தார் ராமதுரை. எழுதுவதைத் தவிர வானொலி, தொலைக்காட்சி பேட்டிகளிலும் பங்கேற்றார்.

2018-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் ராமதுரை காலமானார்.

ராமதுரையின் மின்னஞ்சல் முகவரி nramadurai@ஜிமெயில்.காம் (ராமதுரையின் மகனுடன் தொடர்பு கொள்ள).

***