அச்சமயத்தில் இக்குழுவில் சேராத பியாஸி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒரு ’குட்டிக் கிரக’ த்தைக் கண்டுபிடித்தார். அது தான் சீரீஸ்(Ceres)எனப்படும் அஸ்டிராய்ட் ஆகும். “காணாமல் போன” கிரகம் அதுவாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தனர். பின்னர் தான் எண்ணற்ற அஸ்டிராய்டுகளில் அதுவும் ஒன்று என்பது தெரிய வந்தது.
ஒரு கிரகம் இருந்திருக்குமானால் அதற்கென ஒரு சுற்றுப்பாதை இருந்திருக்கும். விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்த போது மேற்படி சுற்றுப்பாதையில் ஒன்றல்ல, பல லட்சம் துண்டுப் பாறைகள் பறந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
![]() |
| புள்ளி புள்ளியாக உள்ளவை அஸ்டிராய்டுகள். இவை செவ்வாயின் (Mars) மற்றும் வியாழனின் (Jupiter) சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளன. |
அஸ்டிராய்டுகளில் உள்ள பெரிய துண்டு தான் சீரீஸ். அதன் குறுக்களவு வெறும் 950 கிலோ மீட்டர். அது சந்திரனையும் விடச் சிறியது.
![]() |
| வலது புறம் பூமி. இடது மேல் சந்திரன். இடது கீழ் சீரீஸ் |
முதலில் 5000 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி சுற்றும். பிறகு கீழாக 1300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி சுற்றும். பிறகு மேலும் நெருங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பறந்து கொண்டிருக்கும்.
![]() |
| சீரீஸ் படம். டான் விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து எடுத்தது |
டான் விண்கலம் கடந்த 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அது முதலில் வெஸ்டா (Vesta) எனப்படும் வேறு ஒரு அஸ்டிராய்டை நெருங்கிச் சென்று ஆராய்ந்தது. அதை முடித்துக் கொண்டு டான் இப்போது சீரீஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சீரீஸில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு அடியில் ஒருவேளை தண்ணீர் இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
![]() |
| நாஸாவின் டான் விண்கலம் |



