புளூட்டோவைச் சுற்றிலும் துகள் படலம் இருக்கலாம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது. நெல்மணி சைஸில் உள்ள துகள் தாக்கினாலும் விண்கலம் சேதமடைந்து விண்கலம் செயல்படாமல் போகலாம் என்ற அச்சம் இருந்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் ஏற்படவில்லை.
புளூட்டோவை நியூ ஹொரைசன்ஸ் கடந்த போது விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. எட்டு நிமிஷங்களில் அது புளூட்டோவைக் கடந்து சென்றது.
அப்போது புளூட்டோவுக்கும் விண்கலத்துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.
நியூ ஹொரைசன்ஸ் எடுத்த படங்களை நாஸா விஞ்ஞானிகள் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு வாக்கில் வெளியிட்டனர்.
நாஸா வெளியிட்ட புளூட்டோவின் குளோசப் படம்
புளூட்டோவில் பனிக்கட்டியால் ஆன உயர்ந்த மலைகள் இருப்பதை அப்படங்கள் காட்டின.புளூட்டோவைச் சுற்றும் சாரோன் என்ற சந்திரனில் நீண்ட பள்ளத்தாக்கு இருப்பதையும் அவை காட்டின.
எனினும் சந்திரனில் இருப்பது போன்ற வட்டவடிவப் பள்ளங்க்ள் புளூட்டோவில் காணப்படவில்லை.
![]() |
புளூட்டோவின் சந்திரன்களில் ஒன்றான சாரோன் NASA |