குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.
![]() |
| எரிமலை வாய்க்குள் இருந்து சாம்பல் புகை வெளிப்படுவதைக் காண்க |
![]() |
| கொதிக்கும் நெருப்புக் குழம்பின் விளிம்பில் சிறிய உருவமாக ஜார்ஜ் தெரிவதைக் கவனிக்கவும். |
பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.
இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.
![]() |
| கிடு கிடு பள்ளத்தின் அடியில் நெருப்புக் குழம்பு |
![]() |
| விசேஷ பாதுகாப்பு உடையில் ஜார்ஜ் |
எரிமலைக் குழம்பைக் கண்டு பயம் இல்லையா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. எனக்கு மழையைக் கண்டுதான் பயம் என்றார் அவர்.
அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. எரிமலை வட்டாரத்தில் மழை பெய்யுமானால் எரிமலையிலிருந்து கிளம்பும் ஆபத்தான வாயுக்கள் மழை நீருடன் கலந்து அதன் விளைவாகக் கடும் அமில மழை பெய்ய ஆரம்பிக்கும். அமில மழையானது அவர் அணிந்த காப்பு உடைகளை அரித்து விடும். அமில மழையானது உலோகங்களையும் அரித்து விடக்கூடியவை. வெறும் தூறல் இருந்தாலும் ஆபத்து தான்.
ஜார்ஜ் புரிந்த சாதனை மெச்சத்தக்கது என்பது ஒரு புறம் இருக்க, அவர் உள்ளே இறங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் எரிமலையின் உட்புறத்தை நாம் காண்பதற்கு அரிய வாய்ப்பை அளித்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஜார்ஜ் கூரூனிஸுடன் சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.
கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்
அவரது இப்படியான சாகசங்கள் ஒரு பிரபல மேற்கத்திய டிவி சேனலில் சீரியலாகக் காட்டப்படுகின்றன. கீழே விடியோ காண்க.



