'"நட்சத்திரம் கீழே விழுகிறது" என்று பலரும் இதைத் தவறாக வருணிப்பர். இதைப் பார்க்க நேரிட்டால், "உடனே ப்ச்சை மரத்தைப் பாரு” என்றும் கூறுவார்கள்.
இவ்விதம் வான மண்டலம் வழியே கீழே இறங்கும் ஒளிக் கீற்றானது நட்சத்திரமே அல்ல. விண்வெளியிலிருந்து மிளகு சைஸிலான சிறிய கல் துணுக்கு அல்லது அதை விடச் சிறிய மணல் துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைய நேரிட்டால் இவ்விதம் தீப்பற்றி கீழ் நோக்கி இறங்கும். இவ்விதத் துணுக்குகள் முற்றிலுமாக எரிந்து பொடியாகி அந்தப் பொடி காற்றோடு கலந்து பூமியில் வந்து சேரலாம். ஆக, சிறிய துணுக்கு தான் இவ்விதம் "ஷோ" காட்டுகிறது.
நட்சத்திரம் பூமியை விட பல ஆயிரம் அல்லது பல லட்சம் மடங்கு பெரியது. தவிர, நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீட்டர் அப்பால் உள்ளவை. சொல்லப் போனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் பயங்கர வேகத்தில் பூமியிடமிருந்து மேலும் மேலும் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே எந்த நட்சத்திரமும் பூமியை நெருங்க வாய்ப்பே கிடையாது. ஆகவே "நட்சத்திரம் விழுகிறது" என்பது முற்றிலும் தவறான விளக்கம்.

விண்வெளியில் எண்ணற்ற விண்கற்கள் (Asteroids) உள்ளதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டோம். பறக்கும் மலை என்று சொல்லத்தக்க விண்கல்லிலிருந்து நம் வீட்டு அம்மிக்கல் வரை வெவ்வேறு சைஸ்களில் விண்கற்கள் உள்ளன. இவை அல்லாமல் ரோடு போடுவதற்குப் பயன்படும் ஜல்லி சைஸிலும் கூழாங்கல் சைஸிலும் விண்கற்கள் உள்ளன. தவிர மணல் துணுக்குகள், தூசு முதலியவையும் விண்வெளியில் உள்ளன.இவை தோன்றியது எப்படி?
செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே Main Asteroid Belt உள்ளது பற்றி முந்தைய பதிவில் கூறினோம். சூரியனைச் சுற்றி வரும் இந்த பல லட்சம் அஸ்டிராய்டுகள் அணிவகுத்துச் செல்கையில் ஒன்றோடு ஒன்று மோதி உடைகின்றன். இவ்வித மோதல்களின் போது தோன்றும் துண்டு துணுக்குகள், மணல். தூசு ஆகியவையும் பூமி இருக்கின்ற வட்டாரத்துக்கு வந்து சேர்ந்து பூமியின் காற்று மண்டலம் வழியே கீழே இறங்குகின்றன. அப்போது தான் "நட்சத்திரம் விழுவது" போன்ற காட்சி தோன்றுகிறது.
வால் நட்சத்திரங்கள் உடைவதால் ஏற்படுகின்ற தூசு, இயல்பாக விண்வெளியில் உள்ள தூசு முதலியவையும் இவ்விதம் பூமிக்குள் வந்து இறங்குகின்றன. ஓர் ஆண்டில் சுமார் 10 ஆயிரம் டன் எடை அளவுக்கு இவை பூமியில் வந்து விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது (அண்டவெளித் தூசு என தனி சமாச்சாரமும் உள்ளது).
வால் நட்சத்திரங்கள் வந்து செல்லும் போது ஏராளமான நுண்ணிய துகள்களை விட்டுச் செல்லும். அவற்றை அடித்துச் செல்ல விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் அத்துகள்கள் விண்வெளியில் பரவி நிற்கும். பூமி தனது பாதையில் அத்துகள்களின் ஊடே செல்லும் போது அத்துகள்கள் வான் மண்டலம் வழியே கீழே இறங்கும். அப்போது எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் தென்படும். இதை ஒளிமழை (Meteor Shower) என்று கூறுவார்கள். இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் இந்த ஒளிமழை தென்படும். மேலை நாடுகளில் ஆர்வலர்கள் இரவில் ஊருக்கு வெளியே வாய்ப்பான இடங்களில் கூடி இதைக் காண்பர்.
இது ஒருபுறம் இருக்க கால்பந்து அல்லது அதை விட சற்றே பெரியதான விண்கற்கள் அவ்வப்போது பூமியில் வந்து விழுகின்றன. இவை முற்றிலுமாக எரிந்து போவது கிடையாது. இவை நெருப்புப் பந்து போல வானிலிருந்து கீழே இறங்கும். அக்கட்டத்தில் இவை பல துண்டுகளாக வெடித்து அத்துண்டுகள் பூமியில் வந்து விழும். ஆங்கிலத்தில் இதை Meteorite என்கிறார்கள்,.

விஞ்ஞானிகளைப் பொருத்த வரையில் இவை மிக அரிய கற்கள். இந்த விண்கற்கள் சூரிய மண்டலம் தோன்றிய போது உருவானவை என்று கருதப்படுகிறது. ஆகவே புதிதாக விண்கல் கிடைத்தால் விஞ்ஞானிகள் அதை ஆராய்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அரும் பொருட்களைச் சேகரிக்கிறவரகள் விண்கற்களை விலைக்கு வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றுக்கு நல்ல விலை உண்டு. பாலைவனங்கள், மற்றும் அண்டார்டிகா போன்று பனிக்கட்டியால் மூடப்பட்ட பிராந்தியங்கள் ஆகிய இடங்களில் வானிலிருந்து கீழே வந்து விழுந்த விண்கற்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூட விண்கல் வந்து விழலாம். ஆனால் எது விண்கல் என்று கண்டுபிடிக்கத் தனித் திறன் தேவை.
ஒரு சமயம் அமெரிக்காவில் சிறிய சைஸ் விண்கல் ஒன்று (மரப் பலகையால் ஆன) கூரையைப் பொத்துக் கொண்டு விட்டுக்குள் வந்து விழுந்தது. ஜெர்மனியில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மிகச் சிறிய விண்கல் விழுந்தது.
பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியது இப்போதைய நமீபியா நாட்டில் வந்து விழுந்த ஹோபா (Hoba Meteorite) விண்கல்லாகும். இதன் நீளம் சுமார் 3 மீட்டர். அகலம் மூன்று மீட்டர். உயரம் ஒன்றரை மீட்டர். எடை 60 டன். ஏறக்குறைய 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனினும் 1920 ஆம் ஆண்டில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. விழுந்த இடத்திலேயே அப்படியே பாதுகாக்கப்பட்டு வரும் இந்த விண்கல் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.
அபூர்வமாக பல மீட்டர் நீளமுள்ள விண்கல் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைவது உண்டு. ரஷியாவில் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் செலியாபின்ஸ்க் நக்ருக்கு அருகே சுமார் 15 மீட்டர் நீளமுள்ள விண்கல் (அஸ்டிராய்ட்) காற்று மணடலத்தில் நுழைந்து வெடித்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அப்போது தோன்றிய அதிர்ச்சி அலைகள் காரணமாகவே எண்ணற்ற கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
வானில் ஒரு விண்கல் வெடிப்பது என்பது மிக அபூர்வமாகவே நிகழும். இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் துங்குஸ்கா என்னுமிடத்தில் இது போன்று ஏற்பட்டது. அது மனித நடமாட்டமற்ற இடம், ஆனால் ஊசியிலைக் காடுகள் நிறைந்தது. வானில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் விளைவாகக் கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றின். அதன் காரணமாக எண்ணற்ற மரங்கள் ஒரேயடியாகச் சாய்ந்தன.

அங்கு வானில் வெடித்தது விண்கல்லா அல்லது பூமியை நோக்கி இறங்கிய வால் நட்சத்திரமா என்பது தெரியவில்லை.
மிக மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியில் வந்து விழுந்து பெரு நாசத்தை ஏற்படுத்துவது என்பது மிக அபூர்வமானது. சுமார் 65 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்க கணடத்தின் தென் புறத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல் வந்து விழுந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விண்கல் வந்து விழுந்ததால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவே டைனோசார் வகை விலங்குகள் அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது.
அந்த விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் டைனோசார் விலங்குகள் இனம் அழிந்ததற்கு பெரிய விண்கல் விழுந்தது தான் காரணமா என்பது குறித்து இன்னமும் சர்ச்சை உள்ளது. விழுந்தது விண்கல்லாக இல்லாமல் ஒரு வால் நட்சத்திர்மாக இருக்கலாம் என இப்போது ஒரு புதுக் கருத்து கூறப்பட்டுள்ளது.
விழுந்தது எதுவாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் இப்படியான பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.