![]() |
கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டதாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல். வி ராக்கெட் மார்க் 2 |
இந்த ராக்கெட்டில் மூன்றாவதான முகப்புப் பகுதி இந்த எஞ்சினைக் கொண்டதாக செயல்பட்டது. கிரையோஜெனிக் எஞ்சின்கள் அதிகத் திறன் கொண்டவை. அதிக ஆற்றலை அளிப்பவை. எனவே கிரையோஜெனிக் எஞ்சினைக் கொண்ட ராக்கெட்டினால் அதிக எடையை சுமந்தபடி அதிக உயரத்துக்குச் செல்ல முடியும்.
![]() |
சோதிக்கப்படும் நிலையில் கிரையோஜெனிக் எஞ்சினின் அடிப்புறப் பகுதி |
ஹைட்ரஜன் வாயு எரியக்கூடியது. அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. இரண்டையும் ராக்கெட்டில் தனித் தனி தொட்டிகளில் வாயு வடிவில் வைத்து எரியச் செய்வதானால் பிரும்மாண்டமான தொட்டிகள் தேவை. ராக்கெட்டில் அவ்விதம் பிரும்மாண்டமான தொட்டிகளை இணைத்தால் ராக்கெட் கிளம்பாது. எனவே இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி வெவ்வேறு தொட்டிகளில் வைத்து ,தக்க சமயத்தில் ஒன்று சேர்ந்து எரியச் செய்யும் ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. கடுமையான அளவுக்குக் குளிர்வித்தால் தான் இந்த வாயுக்கள் திரவமாக மாறும்.
ஆனால் இந்த இரண்டு வாயுக்களையும் பயன்படுத்தும் எஞ்சினை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உண்டு. எஞ்சினில் இந்த இரண்டு திரவங்களும் விசேஷத் தொட்டிகளில் அடங்கியிருக்கும். ராக்கெட்டின் அடிப்புறத்தில் உள்ள எஞ்சின் அறைக்கு வரும் போது இவை வாயுவாக மாறி ஒன்று கலந்து எரியும்.
![]() |
கிரையோஜெனிக் எஞ்சின் தரையில் வைத்து சோதிப்பு |
எனவே ராக்கெட்டில் நெருப்பு பீச்சுப் பகுதியின் வெளிப்புறத்தில் குளிர்விப்பு செய்தால் உருகாது. அதற்கு அதே அந்த திரவங்களைப் பயன்படுத்த வேண்டும். இப்படியாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
![]() |
கிரையோஜெனிக் எஞ்சின் |
![]() |
கிரையோஜெனிக் எஞ்சின் சோதிப்பு இன்னொரு படம் |
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் நமது சொந்தத் தயாரிப்பான கிரையோஜெனிக் ராக்கெட்டைப் பயன்படுத்திய போது அந்த எஞ்சின் செயல்படவில்லை. எனினும் 2014 ஆம் ஆண்டில் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட்டு ஜிசாட் 14 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த செயற்கைக்கோளின் எடை (1980 கிலோ) குறைவு என்பதால் ஒருவேளை வெற்றி கிட்டியதோ என்றும் நினைக்கத் தோன்றியது.
அந்த சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் கூடுதல் எடை கொண்ட ( எடை 2117 கிலோ) ஜிசாட் 6 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. எனவே நமது கிரையோஜெனிக் எஞ்சின் நம்பகமான வகையில் செயல்படக்கூடியது என்று தோன்றுகிறது.
ஆனால் இது போதாது என்று கருதி இந்த எஞ்சினை விட அதிகத் திறன் கொண்ட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிற புதிய மாதிரி கிரையோஜெனிக் எஞ்சினை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இப்புதிய எஞ்சின் இன்னும் ராக்கெட்டில் வைத்து சோதிக்கப்படவில்லை. ஆனாலும் தரையில் நிலையாக வைத்து சோதித்ததில் அது நன்கு செயல்பட்டுள்ளது.
![]() |
ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட்டின் முகப்புப் பகுதி |
மார்க் 3 ராக்கெட் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து தடவை வெற்றி கண்டால் நாம் ராக்கெட் துறையில் நல்ல முன்னேற்றதை அடைந்தவர்கள் ஆவோம்.
1994 ஆம் ஆண்டிலிருந்து நமது பி.எஸ்.எல்.வி ராக்கெட் 30 தடவைகள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது என்பது வாஸ்தவமே. அதன் திறன் குறைவு. ஆனாலும் அதை வைத்துக் கொண்டே நாம் பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்றாலும் ராக்கெட் துறையில் கடந்த 20 ஆண்டுளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.
ஆகவே தான் 1988 ஆம் ஆண்டிலிருந்து நமது எடை மிக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட் தளத்திலிருந்து அவர்களது ஏரியான் மூலம் செலுத்தச் செய்து வருகிறோம்.
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் 18 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஏரியான் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால் அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நமது சொந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினின் இப்போதைய வெற்றி அதற்கான பாதையைத் திறந்து விட்டுள்ளது.
.